புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, தொடர்ந்து தமிழக அரசை பற்றி தவறாக விமர்சிக்கிறார். இது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை முறையாக வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் முறையாக வழங்கி விட்டதாக தமிழக அரசை குறை கூறி அப்பட்டமான பொய்யை தமிழிசை கூறியிருக்கிறார். 73 ஆயிரம் குடும்ப தலைவிகளில் இதுவரை யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பாஜகவினர் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள். அந்த சாரம் தமிழிசைக்கும் உள்ளது. தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க பார்க்கிறார். அவர் எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வியை தழுவுவார்.
புதுச்சேரி மாநிலத்தில் 73 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை கொடுத்ததாக கூறும் தமிழிசை அதனை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமி எப்போதெல்லாம் முதலமைச்சராக வருகிறாரோ அப்போதெல்லாம் மாமூல் கேட்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். சட்டசபைக்குள்ளும், வெளியேயும் புரோக்கர்கள் கூட்டம் இருக்கிறது. கோயில் நிலம் அபகரிப்பு, மாமூல், லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து என தலைவிரித்தாடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்பி தேர்தலில் போட்டியிட சர்ச்சை பேச்சு 73,000 மகளிருக்கு உதவித்ெதாகை என தமிழிசை பொய் சொல்கிறார்: புதுவை மாஜி முதல்வர் நாராயணசாமி கண்டனம் appeared first on Dinakaran.
