பராமரிப்பு பணி காரணமாக 12 ரயில்கள் இன்று புட்லூரில் நிற்காது: தெற்கு ரயில்வே தகவல்

திருவள்ளூர், செப். 17: பராமரிப்பு பணி காரணமாக இன்று 12 மின்சார ரயில்கள் புட்லூரில் நிற்காமல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வையின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் வழிதடத்தில் உள்ள திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் ரயில் நிலையங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் திருவள்ளூர் – திருநின்றவூர் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் விரைவு ரயில் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் புட்லூரில் ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கப்படும்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 10.5, 11.25, மதியம் 1.5 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 10, 11.15, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 10.15, மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11 மணி, மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் கடம்பத்தூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12.5 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் புட்லூர் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக 12 ரயில்கள் இன்று புட்லூரில் நிற்காது: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: