 ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கோபுர விமான கலசம் அமைப்பு

மேட்டூர், செப்.17: மேச்சேரி கைகாட்டி வெள்ளார் வசந்தம் நகர்  ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் கோபுர விமான கலசம் நேற்று வைக்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு கோபுரத்தில் விமான கலசம் வைக்கப்பட்டது. சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.  ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளையின் நிறுவனர் உரக்கடை ஆறுமுகம், தலைவர் முருகேசன், செயலாளர் நாகநந்தினி, பொருளாளர் வசந்தா, அறங்காவலர்கள் மற்றும் திருவிழா குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

The post  ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கோபுர விமான கலசம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: