நடந்து சென்ற மூதாட்டி டூவீலர் மோதி உயிரிழப்பு

சேலம், செப்.17: சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று முன்தினம் மதியம் வரை தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இதனிடையே பகல் ஒரு மணிக்கு மேல் உண்ணாமலைக்கு உரிமைத்தொகை அனுப்பப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், அந்த தொகையை ஏடிஎம்மில் இருந்து எடுப்பதற்காக சூரமங்கலம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த மர்மநபர், உண்ணாமலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில், கீழே விழுந்த உண்ணாமலையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உண்ணாமலை உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நடந்து சென்ற மூதாட்டி டூவீலர் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: