சிறுதானியம் விழிப்புணர்வு போட்டி

 

கம்பம், செப். 16: தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரைப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் ஆகியோர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி கம்பம் வட்டார உணவுபாதுகாப்புத்துறை சார்பில் கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளயில் பள்ளி மாணவிகளுக்கு சிறுதானியங்கள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.கம்பம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமாறன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post சிறுதானியம் விழிப்புணர்வு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: