துறையூரில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

துறையூர், செப்.15: துறையூர் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார். உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் மருதை, முசிறி ஒன்றிய செயலாளர் சண்முகம், வி.தொ.ச மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கிடு, இந்தி திணிப்பை கைவிடு, சொந்த லாபங்களுக்காக நாட்டை விற்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென சாலை மறியல் செய்ய முயன்றதால் 30க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

The post துறையூரில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: