காரை கிராமத்தில் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பாடாலூர்,செப்.15: ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் கல்வி திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சங்க செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் விசுவநாதன் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் சரக துணைப் பதிவாளர் இளஞ்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும், அதிகளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் பெற்று பயனடைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் செயலாட்சியர் பிரதீபா, கூட்டுறவு ஒன்றிய மேலாளர் சாமிநாதன், மகளிர் சுய உதவி குழுக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூரில் மேம்பாலம் திறந்து 3 ஆண்டுகள் ஆகியும்

The post காரை கிராமத்தில் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: