சூரத்தில் இருந்து 1320 டன் யூரியா வரத்து

சேலம், செப்.14: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து, நேற்று 1320 டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் சேலம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த யூரியா உரம், சேலம், நாமக்கல், ஈரோடு கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 800டன் யூரியா வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1587டன் யூரியாவும், பொட்டாஷ் 544 டன், டிஏபி உரம் 890 டன், காம்ப்ளக்ஸ் உரம் 1591 டன் என மொத்தம் 4612 டன் உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது போதுமான இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரத்தினை பெற்று பயன்பெறலாம் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

The post சூரத்தில் இருந்து 1320 டன் யூரியா வரத்து appeared first on Dinakaran.

Related Stories: