C3-CP03-UG-03 பிரிவிற்கான மதிப்பு ரூ.1730.60 கோடி, C3-CP04-UG04 பிரிவிற்கான மதிப்பு ரூ.1461.97 கோடி மற்றும் C3-CP05-UG05 பிரிவிற்கான மதிப்பு ரூ. 865.63 கோடி என மூன்று ஒப்பந்தங்கள் மொத்தம் ரூ.4058.20 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைபதற்கான அனைத்து வகையான பணிகளும் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளை உள்ளடக்கியது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர் ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை), கூடுதல் பொது மேலாளர் டி.குருநாத ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகாம் என்ற நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.