தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை!: கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

நீலகிரி: தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனையில் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் கூடலூர் அரசு மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை. கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதனிடையே, நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் 11 தமிழக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மாவட்டத்தில் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கேரளாவில் இருந்து கோவை வருவோரை கண்காணிக்க, காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து வருவோரை தனியாக கண்டறிந்து விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை!: கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: