காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் உத்தரவை மீறுகிறதா கர்நாடகா?: முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது குறித்து முடிவெடுக்க இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 5000 கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும் என்று நேற்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அடுத்து நேற்று இரவு 8 மணியளவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா இன்று மதியம் 12.30 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என்றும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

The post காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் உத்தரவை மீறுகிறதா கர்நாடகா?: முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: