சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: கிராமமக்கள் பங்கேற்பு

 

சிவகாசி, செப்.13: சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான விவேகன்ராஜ் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார் தலைமையில் 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி, விஜயலட்சுமிகாலனி, நேருகாலனி உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள், பொதுமக்கள் என 741 பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் ஊராட்சி துணைத்தலைவர் லோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணி, சுடர்வள்ளி சசிக்குமார், ஒன்றிய திமுக இளைஞரணி உசிலை தங்கராம், ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபுத்திரன் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் கூறும்போது, வரும் 19ம் தேதி எரிச்சநத்தம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. இந்த மருத்துவ முகாமை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.

The post சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: கிராமமக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: