கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது

*மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

ஊட்டி : ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு மூன்று கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் தமிழக – கர்நாடக எல்லையாக கக்கநல்லா சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அதேபோல் கேரள மாநிலத்திற்கும் இவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் தமிழக காவல்துறை சோதனை சாவடி அமைத்து இவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை இட்ட பின்னரே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடையே முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார். அவரை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில், அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் (29) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு இந்த கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

The post கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: