பாரதியார் 102வது நினைவு தினம் மாணவ, மாணவிகளுக்கு போட்டி

திருச்சி, செப்.12: மகாகவி பாரதியாரின் 102வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாறுவேட போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, யோகா போட்டி, பேச்சு போட்டி, பாட்டு போட்டி, வினாடி வினா, கடிதம் எழுதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர் பிரிவில் 3 முதல் 5 வகுப்பு வரை மாறுவேட போட்டியும், 6 முதல் 8 வரை கவிதை ஒப்புவித்தல், யோகா போட்டி, பாட்டு போட்டியும், சீனியர் பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தில் 42 பள்ளிகளை சேர்ந்த 650 மாணவிகள், 350 மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் ஜூனியர் பிரிவுகளில் தலா 5 பரிசுகளும், சீனியர் பிரிவில் தலா 5 பரிசுகள் வீதம் மொத்தம் 120 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை இ.ஆர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தினர். இதில் இ.ஆர் மேல்நிலை பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ராகவன் தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவர் சூரிய நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, போட்டிகளின் நடுவர் குழுவை சேர்ந்த சரவணன், பத்ரி நாராயணன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாரதியார் 102வது நினைவு தினம் மாணவ, மாணவிகளுக்கு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: