14 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹84 ஆயிரம் நலத்திட்ட உதவிகள்

சேலம், செப்.12: சேலத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹84,380 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 422 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 22 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹82,080 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹2,300 மதிப்பிலான ஊன்றுகோல் என மொத்தம் 14 பேருக்கு ₹84,380 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, டிஆர்ஓ மேனகா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹84 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: