திருச்செந்தூர் கோயிலில் 8ம் நாள் விழா: வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழாவின் 8ம் நாளான இன்று வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்தார். மாலையில் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வருகிறார். நாளை மறுநாள் (13ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 8ம்திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளைமறுநாள் (புதன்) காலை 6 மணிக்கு நடக்கிறது.

The post திருச்செந்தூர் கோயிலில் 8ம் நாள் விழா: வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: