ஊத்துக்கோட்டை,செப். 11: அனந்தேரி கிராமத்தில் ஆபத்தான முறையில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் அனந்தேரி கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக செல்லியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 3 வாரமாக கோயில் வளாகத்திலும், அதன் அருகிலும் பொங்கல் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோயில் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் ஆபத்தான முறையில் இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் வைத்து வழிபட இடையூறு டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.
