சமயபுரத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைஅலுவலகம் திறப்பு விழா

 

சமயபுரம், செப்.11: திருச்சி சமயபுரம் மெயின்ரோடு பிச்சாண்டார்கோயில் அருகில் அபிராமி காம்ப்ளக்சில் புதிதாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டின் அலுவலக கிளை அமைக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் நிர்வாக இயக்குனர் கே.சுவாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மேலாளர் கே.முரளி, ரெப்கோஹோம் பைனான்ஸ் லிமிடெட்டின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கிளையில் வீட்டு மனைகள் வாங்க, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட, வீடு பழுது பார்க்க, விரிவாக்கம் செய்ய, வீட்டு கடனை மாற்றி கொண்டு கூடுதல்தொகை பெற கடன் வழங்கப்படுகிறது.

மேலும் வணிக சங்கம் கட்டுவதற்கும், வாங்குவதற்கும், வீட்டின் பெயரில் அடமான கடன் வாங்குவதற்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி நிர்வாக கட்டணத்தில் 0.50 சதவீதமும், செய்முறை கட்டணத்தில் 0.25 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருச்சி கிளை மேலாளர் யோகேஸ்வரன் மற்றும் சமயபுரம் கிளை பொறுப்பாளர் கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post சமயபுரத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைஅலுவலகம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: