பிரதமர் மோடி பிசியாக இருக்கிறார் பாஜ – மஜத கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: எடியூரப்பா தகவல்

பெங்களூரு: மக்களவை தேர்தலுக்கான பாஜ – மஜத கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், பிரதமர் மோடி மற்ற விவகாரங்களில் பிசியாக இருப்பதால், இன்னும் 2-3 நாட்களில் இதுதொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்காக பாஜ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகள் தீவிரமாக தயாராக தொடங்கிவிட்டன.கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை பலமாக எதிர்கொள்ள மஜதவுடன் கூட்டணி அமைக்கிறது. அண்மையில் இதுதொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான எடியூரப்பா, பாஜ – மஜத இடையே நல்ல புரிதல் இருந்துவருவதாகவும், மக்களவை தேர்தலில் மஜதவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பாஜ 24 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், பாஜ – மஜத கூட்டணி கட்டாயம் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மஜதவுடனான கூட்டணி குறித்து மீண்டும் பேசியுள்ள பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, ’பிரதமர் மோடி மற்ற விவகாரங்களில் பிசியாக இருக்கிறார். இன்னும் 2 நாட்களில் மோடி மற்றும் அமித் ஷாவுடன் பேசி முடிவெடுக்கப்படும். இதுவரை அவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். நான் முன்பு பேசியபோது கூட்டணி குறித்த எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது எதுவும் முடிவாகவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மற்ற தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். பிரதமர் மோடி பல விவகாரங்களில் பிசியாக இருக்கிறார். எனவே அடுத்த 2-3 நாட்களில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும்’ என்று எடியூரப்பா தெரிவித்தார்.

 

The post பிரதமர் மோடி பிசியாக இருக்கிறார் பாஜ – மஜத கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: எடியூரப்பா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: