யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்-மெட்வெடேவ் இறுதி போட்டியில் மோதல்; அல்காரஸ் வெளியேற்றம்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதியில் செர்பியாவின் 36 வயதான ஜோகோவிச், அமெரிக்காவின் 20 வயதான பென் ஷெல்டன் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். தொடர்ந்து இன்று காலை நடந்த மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் 20 வயது கார்லோஸ் அல்காரஸ், 3வது நிலை வீரரான 27 வயது ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் மோதினர்.

இதில் 7-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மெட்வெடேவ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இந்த தோல்வியால் அல்காரஸ் முதல் இடத்தை இழந்தார். திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் பைனலில் ஜோகோவிச்-மெட்வெடேவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் ஜோகோவிச் சென்றால் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்-மெட்வெடேவ் இறுதி போட்டியில் மோதல்; அல்காரஸ் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: