கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு தூக்கியடிப்பு

சேலம், செப்.9: பல்வேறு புகார் எதிரொலியாக கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுப்புரத்தினம். இவர் மீது புகார் மனுக்களை சரிவர விசாரிக்கவில்லை என்றும் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார் என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர், சரக டிஐஜிக்கு எஸ்பி அருண்கபிலன் அறிக்கை அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினத்தை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி டிஐஜி ராஜேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மாவட்ட கொடுங்குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தேவராஜ், கொளத்தூர் இன்ஸ்பெக்டராக நியமித்து டிஐஜி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் தேவராஜ் நேற்று கொளத்தூரில் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு தூக்கியடிக்கப்பட்ட இச்சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு தூக்கியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: