விதி மீறும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்க கூடாது சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி: திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று திருச்சி கோர்ட்டுகளில் 24 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. புதுடெல்லி தேசிய ஆணைக்குழு மற்றும் சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு உத்தரவுப்படி திருச்சியிலுள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் அமைந்திருக்கும் கோர்ட்டுகளில் 14 அமர்வுகளும், மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி தாலுக்காக்களில் தலா 2 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், ரங்கம், தொட்டியம் ஆகிய 2 தாலுக்காக்களில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வும் என மொத்தம் 24 அமர்வுகளில் வழக்குகள் நடைபெறும். இதில் வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் அழைத்து சமரச முறையில் பேசி வழக்குகளை சமரசம் செய்து முடித்து வைக்கப்படும். இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போககூடிய வழக்குகள்), தொழிலாளர் நல தீர்வாயத்தில் நஷ்ட ஈடு கோரும் வழக்குகள் உட்பட சமரச தீர்வு பெறத்தக்க வழக்குகளில் தீர்வு எட்டப்படும். ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் மாவட்ட நீதிபதி, சார்பு நீதிபதி தற்போது பணியில் உள்ள நீதிபதி ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் இருதரப்பினருடன் கலந்து ஆலோசித்து வழக்குகளில் சமரச தீர்வு செய்வார்கள். இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு உத்தரவின்படி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நசீர்அலி செய்துள்ளார்.

The post விதி மீறும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்க கூடாது சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: