விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்கள்

சேந்தமங்கலம், செப்.7: சேந்தமங்கலம் வட்டாரத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்களை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார். நாமக்கல் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ், 5 ஆயிரம் பவர் டிரில்லர் வழங்கும் விழா, சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ, 10 விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றியகுழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, துணைத் தலைவர் கீதாவெங்கடேஸ்வரன், பிடிஓ.,க்கள் ரவிச்சந்திரன், சுகிதா, ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி, பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கடல் வீரன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி செந்தில்குமார், தேவி மாரிமுத்து, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு பவர் டிரில்லர்கள் appeared first on Dinakaran.

Related Stories: