200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட வி.வி.ஐ.பி விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இரு ஓட்டல்களிலும் திருமண சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் மணமகளான பரினீதி சோப்ராவின் உறவினரான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோரும் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஆம்ஆத்மி எம்பி – நடிகைக்கு ராஜஸ்தானில் திருமணம்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.