ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் ஒன்றிய இணை அமைச்சர் ஆய்வு


ஆவடி: ஆவடியில் பல்லாண்டுகளாக போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (சிவிஆர்டிஇ) நிறுவனத்தில் சார்பில் இயங்கி வரும் ராணுவ பீரங்கி உள்பட பல்வேறு போர் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மாலை முதன்முறையாக ஒன்றிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு பணியில் இருந்த ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் சிவிஆர்டிஇ நிறுவன அதிகாரிகளிடம், ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு பணிகளில் முன்னேற்றம் மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ்.வி.கேட், சிவிஆர்டிஇ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு சாதனைகள், முக்கிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், தற்போது நடைபெறும் திட்டங்களை விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ்.வி.கேட் மற்றும் வி.பாலமுருகன் ஆகியோர் செயல்முறை விளக்கங்கள் அளித்தனர். பின்னர், பிரதான பீரங்கி (அர்ஜுன் எம்கே-ஏ) குழு உறுப்பினர்களுடன் ஒன்றிய அமைச்சர் அஜய் பட் பயணித்து, அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்தார். மேலும் ‘மேக் இன் இந்தியா’ கருத்துடன் தேசத்தை மேம்படுத்துவோம் என்று ஒன்றிய அமைச்சர் அஜய் பட் நம்பிக்கை தெரிவித்தார்.

The post ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் ஒன்றிய இணை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: