இன்று மூக்கையா தேவர் நினைவு தினம்: திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும்

திருமங்கலம், செப். 6: மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வித்தந்தை மூக்கையா தேவர் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி உசிலம்பட்டி பசும்பொன்முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும். இதில் பங்கேற்கும் கட்சியினர் காலை 9.15 மணியளவில் செக்கானூரணிக்கு வருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இன்று மூக்கையா தேவர் நினைவு தினம்: திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: