20டன் கொப்பரை ₹15லட்சத்திற்கு ஏலம்

போச்சம்பள்ளி, செப்.6: போச்சம்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடந்தது. போச்சம்பள்ளி, அரசம்பட்டி, புலியூர், மொரப்பூர், கல்லாவி, ஈச்சம்பாடி டேம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 20 டன் கொப்பரையை கொண்டு வந்து குவித்தனர். திருப்பத்தூர், வெள்ளக்கோவில், வாணியம்பாடி மற்றும் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு கிலோ ₹52 முதல் ₹77 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 20டன் கொப்பரை ₹15லட்சத்திற்கு ஏலம் போனது. வேளாண் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுந்தரம் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. ஏலத்தொகையை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது.

The post 20டன் கொப்பரை ₹15லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: