சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர் என்.ஆர்.தனபாலன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தி பேசினார். மாணவ, மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆ.மனோகரன் பதக்கங்களை வழங்கினார். தென்சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் என்.டி.மோகன், சிலம்ப ஆசான்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், மலேசியா சாண்டோ ரத்தினம், ஆந்திரா-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் துரை, குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கோவூர் ஊராட்சி தலைவர் சுதாகர், தண்டலம் கே.அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிலம்பக்கழக பொருளாளர் ஜெ.ஈசன் நன்றி கூறினார்.
The post 2023 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை: என்.ஆர்.தனபாலன் துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.