உலகிற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம்

டெல்லி: உலகிற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் “இந்தியா” என்ற சொல்லை தவிர்த்து “பாரதம்” என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் ரவி கூறியுள்ளார். இதேபோல் இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரி என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசி இருந்தார்.

இந்தியா என அழைப்பதை நிறுத்திவிட்டு பாரதம் என அழைக்க தொடங்க வேண்டும் என மோகன் பகவத் கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘ பாரத ஜனாதிபதி ‘ என ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது

“இந்தியா பெயரை தாங்கியே இஸ்ரோ, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.பி.எஸ். உள்ளது

இஸ்ரோ, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.பி.எஸ். ஆகியவை இந்தியா என்ற பெயரையே தாங்கி உள்ளன என கவுரவ் கோகோய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி மீதுள்ள அச்சத்தால் பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

“பாரத் கூட்டணி என பெயர் வைத்தால் அதையும் மாற்றுவார்கள்”

இந்தியா கூட்டணியின் பெயரை பாரத் என்று மாற்றினால் பாஜக அந்த பெயரையும் மாற்றிவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்குச் சொந்தமானது இந்த நாடு. பாரத் என்ற பெயரை மாற்றிவிட்டு நாட்டிற்கு பாஜக என்றுகூட பெயர் சூட்டுவார்கள்

போலி வரலாற்றை உருவாக்க முயற்சி – திக்விஜய் சிங்

சொந்தமாக எந்த வரலாறும் இல்லாதவர்கள் போலியான வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வெறுக்கிறார் மோடி பவன் கெரா

பிரதமர் மோடி எங்கள் மீதுள்ள வெறு வெறுப்பால், இந்தியாவை வெறுக்கிறார் என்று காங். மூத்த தலைவர் பவன் கெரா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் செயலை பார்த்து உலகமே எள்ளி நகையாடுகிறது. இவரு குறிப்பிட்டுள்ளார்.

உலகிற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும் – மம்தா

உலகிற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயரை மாற்றும் அவசியம் எங்கிருந்து வந்தது எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன.

இந்தியா கூட்டணியைக் கண்டு பாஜகவுக்கு அச்சம் – தேஜஸ்வி

இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாகவே இதுபோன்ற செயல்களில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். இந்தியாவுக்கு வாக்களியுங்கள் எனக் கூறிய மோடிக்கு, இந்தியா கூட்டணியைக் கண்டு அச்சம் வந்துவிட்டது.இவ்வாறு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

The post உலகிற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: