ஆண்டரசன் பேட்டையில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் 34ம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன் பேட்டையில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் 34ம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 1ம் தேதி காலை பந்தக்கால் நிகழ்ச்சியும் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதலும், பால்குடம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு 100 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது வேண்டுலை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த தீமிதி திருவிழாவில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை எம். ஜெகன் மூர்த்தி குடும்பத்தினருடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மாநில தொழிற்சங்க செயலாளர் சேகர், சிவராமன், சம்பத், நாகா, வடிவேல், ராம்ஜி, நடராஜ், கந்தன், குமரன், விமல்ஜி, மதியழகன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ஆண்டரசன் பேட்டையில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் 34ம் ஆண்டு தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: