பால் டேங்கர் லாரி கார் மீது மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் காயம்

 

திருத்தணி, செப். 4: பால் டேங்கர் லாரியின் டயர் வெடித்ததால் கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன் குடும்பத்தினர் வீடு 2 கார்களில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதில், லட்சுமாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். இதேப்போன்று, சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து டேங்கர் லாரி மூலம் பால் ஏற்றி கொண்டு வேலூர் சென்று கொண்டிருந்தது.

அப்போது, லாரியின் டயர் வெடித்ததில் கட்டுப்படை இழந்ததில் கமலக்கண்ணன் குடும்பத்தார் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதனால், காரில் வந்த சமிக்க்ஷா, நிகிதா, சமியுஸ்தா என்ற 3குழந்தைகள் மற்றும் யுவராஜ், சதீஷ்குமார், புவனேஸ்வரி, சங்கீதா, கமலக்கண்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலத்த காயமடைந்த சமிக்க்ஷா, நிகிதா, சமியுஸ்தா ஆகிய மூன்று பேருக்கும் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கனகமா சத்திர போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பால் டேங்கர் லாரி கார் மீது மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: