மைக்கேல்பாளையம் ஊராட்சியில்கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

அந்தியூர், செப்.3: அந்தியூர் அருகேயுள்ள மைக்கேல் பாளையம் ஊராட்சி பொய்யேரிக்கரையில், அந்தியூர் வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கலந்து கொண்டு துவங்கி வைத்து பேசியதாவது, ‘‘தமிழ்நாடு முதல்வர், ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி மக்களை தேடி மருத்துவம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தி வருகிறார். அனைத்து ஏழை மக்களும் பயன்பெற வேண்டும்’‘ என்றார்.

இதனை தொடர்ந்து மருத்துவ முகாமில் நோயாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். முகாமில் காப்பீட்டு இலவச மருத்துவம், ஈசிஜி, சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, மகப்பேறு மருத்துவ பரிசோதனை, எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், மனநல மருததுவம் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மேல்சிகிச்சை தேவைபடும் நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பி வைத்திட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் இந்த முகாமில் 30 வகையான ரத்த பரிசோதனைகளும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும், நாய்கடி தடுப்பூசிகளும் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்தியூர், புதுமேட்டூர், சமத்துவபுரம், கூடுமையனூர், வையங்குட்டை, பாலக்குட்டை, பொய்யேரிக்கரை, கள்ளிமடைகுட்டை, புதுக்காடு, மந்தை, வட்டக்காடு, சங்கராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஸ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மைக்கேல்பாளையம் ஊராட்சியில்கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: