பொதுமக்கள் கோரிக்கை ளையம் கிராமத்தில் னித ஆரோக்கிய மாத கோயில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

பெரம்பலூர்,செப்.1: பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் 120வது ஆண்டு பெருவிழா இன்று (1ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், புனித ஆரோக்கிய மாதா கோயில் உள்ளது. 120 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலின் ஆண்டு பெருவிழா இன்று (1ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் ஏற்றப்பட உள்ள கொடி, சப்பர பவனி நடைபெறும் தெருக்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. மாலை 6:30 மணி அளவில் பாளையம் புனித சூசையப்பர் தேவாலய பங்குகுரு ஜெயராஜ் விழாவிற்கு தலைமை வகித்து, கொடியை மந்திரித்து, கொடி மரத்தில் ஏற்றி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் புனித ஆரோக்கிய மாதாவின் நவநாள் திருப்பலிகள் பல்வேறு பங்கு குருக்களால், பல்வேறு தலைப்புகளில் மறையுரைகளுடன் நடத்தப்படுகிறது. வருகிற 7ம்தேதி (வியாழக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, புனித ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர சப்பர பவனி நடைபெறுகிறது. 8ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆண்டுப்பெரு விழா திருப்பலி பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது. ழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை காரியதர் வின்சென்ட் தலைமையில் காரியஸ்தர்கள் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து செய்துள்ளனர்.

The post பொதுமக்கள் கோரிக்கை ளையம் கிராமத்தில் னித ஆரோக்கிய மாத கோயில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: