ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கிராமங்களில் களைகட்டிய கும்மட்டிக்களி கொண்டாட்டம்..!!

திருவனந்தபுரம்: திருச்சூர் மாவட்ட கிராமங்களில் கும்மட்டிக்களி கொண்டாட்டம் வெகு விமர்சனையாக நடைபெற்றது. ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கிராமங்களில் கும்மட்டிக்களி திருவிழா கலைக்கட்டியுள்ளது. வடக்குநாதன் சிவனுடைய பூதகனங்களான ஒவ்வொரு அவதாரங்களும், கும்மட்டிக்களியில் பழைய வேடங்களை அணிந்து கிராமங்களில் உள்ள மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. சிவகணங்களின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து நடனம் ஆடப்பட்டது.

கும்மட்டிக்களியுடன் புலிக்களியும் சேர்ந்து கொண்டதால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க இளம் வட்டங்கள் நடனம் ஆடினர். கும்மட்டிக்களி கலைஞர்கள் பார்ப்படகபுல்லு என்ற புல் வகையால் ஆன ஆடையை அணிவார்கள். பலா மரம் உள்ளிட்ட மரத்தால் ஆன முகமூடியை அணிவார்கள். அந்த முகமூடியில் பிரகாசமான வண்ணங்கள் பூசப்படுகின்றன. ஒவ்வொரு கும்மட்டியும் இந்து புராணங்களில் இருந்து வரும் கதாபாத்திரங்களை சித்தரிக்கிறது.

The post ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கிராமங்களில் களைகட்டிய கும்மட்டிக்களி கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: