அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

ஆண்டிமடம், ஆக.30: தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கான தேர்வு போட்டியும், சாம்பியன்ஷிப் போட்டியும், செங்கல்பட்டு மாவட்டம் மேல கோட்டையூர் தமிழக அரசு விளையாட்டுக் கல்லூரியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஆண்டிமடம்- விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி அக்சயா, சௌபாக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகுந்தன், மார்த்தினார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரேவன் பெட்ரிக் ஆகியோர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர். அதன்படி ராஞ்சியில் கடந்த 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 183 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவி மகாலட்சுமி தங்கப்பதக்கமும், அக்சயா வெள்ளி பதக்கமும், முகுந்தன் தங்கப்பதக்கமும், ரேவன் பெட்ரிக் வெண்கல பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேற்று காலை ஆண்டிமடம் வந்தடைந்தனர் அவர்களை வரவேற்கும் விதமாக அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரீடு. செல்வம் தலைமையில் மேளதாளத்துடன் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கடைவீதி வழியாக அரசு மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தனர். பள்ளியில் மாணவிகள் மகாலட்சுமிக்கும்,அக்சயாவிற்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் முருகன், மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அகில இந்திய போட்டிக்கு செல்ல போக்குவரத்துச் செலவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ., க.சொ.க.கண்ணன் ஆகியோருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். உடற்கல்வி ஆசிரியர் நிர்மலா மேரி, கிக் பாக்சிங் பயிற்றுனர் சத்யராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: