ஓய்வு பெறும் வயதை உயர்த்தக்கோரி பெரம்பலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஆக.30: பெரம்பலூர் மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக- பெரம்பலூரில் நேற்று மாலை கொட்டி மழை யிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்றிட வேண்டும்.தமிழ்நாடு சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு ஓய்வூதி யமாக ரூ 6750ஐ வழங்கிட வேண்டும். 10 வருடங்கள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு அரசின் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக- கொட்டும்மழையில் பெருந்திரள் முறை யீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார்.சங்கத்தின் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் தேன் மொழி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் ரம்யா, சசிக்கலா, வீரமணி, மீனா உமாராணி,சுகன்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செய லாளர் சித்ரா கோரிக்கை களை விளக்கிப்பேசினார். அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆளவந்தார் வாழ்த்தி பேசினார்.. முடிவில் பிரபா வதி நன்றி கூறினார்.

The post ஓய்வு பெறும் வயதை உயர்த்தக்கோரி பெரம்பலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: