கோபியில் 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிப்பு

 

ஈரோடு, ஆக. 30: ஈரோடு மாவட்டம் கோபியில் 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதித்து வேளாண் தரக்கட்டுப்பாடு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் தரமற்ற உரங்களை விவசாயிகளுக்கு விற்றாலோ, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றாலோ மற்றும் உரத்துடன் சேர்த்து பிற ரக பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, ஈரோடு மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கலைச்செல்வி தலைமையில் வேளாண் அலுவலர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கோபியில் உள்ள 2 தனியார் உர விற்பனை நிலையங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அந்த 2 கடைகளுக்கு விற்பனை தடை செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோன்ற திடீர் ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும், உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உரங்களின் அதிகப்பட்ச விற்பனை விலை, இருப்பு விவரத்தை விலை பலகையில் எழுதி, விவசாயிகளுக்கு தெரியும்படி கடை முன்பு வைக்க வேண்டும். ரசீதில் விவசாயிகள் கையெழுத்து பெற்று உரங்களை வழங்க வேண்டும். பி.ஓ.எஸ். கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வி தெரிவித்தார்.

The post கோபியில் 2 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: