அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து புதிய வரைபடம் : சீனாவின் அடாவடி செயலால் மீண்டும் சர்ச்சை

பெய்ஜிங் : அடுத்த மாதம் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீனா, அந்த மாநிலத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை சாப்நான் என பெயரிட்டு அழைக்கும் சீனா, அந்த மாநிலம் இந்தியாவுக்கு சொந்தம் அல்ல என கூறி வருகிறது. ஆனால் இதனை நிராகரித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு தான் சொந்தம் என தெரிவித்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜி20 மாநாடு தொடர்பான சில கூட்டங்களை இந்தியா அங்கு நடத்தியது. அதைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதற்கு தீர்வுகாண இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பலசுற்று பேச்சு நடத்திய நிலையில், தென் ஆப்ரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, எல்லை பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு வலியுறுத்தினார். இந்த நிலையில், நேற்று புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டு பகுதியாக சொந்தம் கொண்டாடியுள்ளது. சாப்நான் என்று அருணாச்சலப் பிரதேசம் அந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து புதிய வரைபடம் : சீனாவின் அடாவடி செயலால் மீண்டும் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: