தாமரைக்குளத்தில் சாலைப்பணி தரத்தினை சாலையில் துளையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

 

அரியலூர், ஆக 29: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை கி.மீ 2/0-19/2 வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் தடுப்பு சுவர்வடிகால் மையத் தடுப்பான், சிறுபாலம் திரும்ப கட்டுதல், சிலாப் கல்வெர்ட்டை அகலப்படுத்துதல் மற்றும் கல்வெர்ட் திரும்ப கட்டுதல் பணியில் சாலையின் தரத்தினை இரண்டு இடங்களில் சாலையை துளையிட்டு சாலையின் தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வு செய்தார்.

சாலை பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரசு செயலாளர் சிறப்பு திட்ட செயலாக்கம் தரேஸ் அஹமது, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர்(பொ) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விஜயலட்சுமி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர்கள் சிட்டிபாபு ,செல்வராஜ் , ராஜா மற்றும் உதவிப் பொறியாளர்கள் இளைய பிரபு ராஜன், முரளிதரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தாமரைக்குளத்தில் சாலைப்பணி தரத்தினை சாலையில் துளையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: