குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தில் மக்கள் சாலை மறியல்

 

குன்னம், ஆக. 29: ஆய்குடி கிராமத்தில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஎழுமுர் ஊராட்சி யை சேர்ந்த ஆய்குடி கிராம எல்லை பகுதியில் அந்தூர் கிராம ஊராட்சிக்கு குடிநீர் தேவைக்காக புதிய கிணறு ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக வெட்டப்பட்டு வருகிறது. ஆய்குடி கிராம மக்கள் ஏற்கனவே எங்கள் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருக்கும் நிலையில் அருகில் உள்ள அந்தூர் ஊராட்சிக்கு எங்கள் பகுதியில் இருந்து கிணறு வெட்டி அதன் மூலம் குடிநீர் எடுத்தால் எங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படும் . இதனால் கிணறு வெட்ட கூடாது என இரண்டு முறை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் நேற்று காலை கிணறு வெட்டும் பணி நடைபெற்றதால் ஆத்திரமடைந்த ஆய்குடி கிராம மக்கள் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் திடீரென ஆய்குடியில் இருந்து கல்லம்புதூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் மங்களமேடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் ஆய்குடி கிராமத்திற்கு என புதிய கிணறு வெட்டி தரபடும் என உறுதியளித்தன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தில் மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: