ஈரோட்டில் நீங்கா நினைவுகளுடன் காலி செய்யும் ஜவுளி வியாபாரிகள்: புதிய சந்தையின் வாடகையைக் குறைக்க வணிகர்கள் கோரிக்கை

ஈரோடு: ஈரோட்டில் அரை நூற்றாண்டு கால பாரம்பரிய மிக்க ஜவுளி சந்தையை நீங்கா நினைவுகளுடன் காலி செய்து வரும் வணிகர்கள் புதிய வணிக வளாகத்தை குறைந்த வாடகைக்கு கடைகளை ஒதுக்க வலியுறுத்தியுள்ளனர். ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பெயர் பெற்ற ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அப்துல் கனி ஜவுளி சந்தை இயங்கி வந்தது. சாலையோர வணிகர்களுக்காக மாநகராட்சி நிர்வாகம் ஒத்துக்கிய இடத்தில் அரைநூற்றாண்டை கடந்து ஜவுளி வர்த்தகம் நடைபெற்று வந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் தினசரி விற்பனை மட்டுமின்றி திங்கள் கிழமை இரவு தொடங்கி அடுத்த நாள் மாலை வரை வாரச்சந்தையிலும் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்றது. ஆனால், தலைகீழ் திருப்பமாக தற்போது அந்த இடத்தையே வணிகர்கள் காலி செய்து வருகின்றனர். ஜவுளி சந்தை அமைந்து இருந்த இடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளதால் வணிகர்களை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தீபாவளி நெருங்குவதால் தங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஈரோட்டில் நீங்கா நினைவுகளுடன் காலி செய்யும் ஜவுளி வியாபாரிகள்: புதிய சந்தையின் வாடகையைக் குறைக்க வணிகர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: