ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 

ஏற்காடு, ஆக.28:ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில், இதமான சூழல் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஏற்காட்டின் குளு குளு சீதோஷ்ணத்தை அனுபவிக்க, விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகளின் அதிகளவில் வந்தனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களாக அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்திணை பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் பொழுதை களித்தனர். பூங்காக்களில் உள்ள ஊஞ்சல், சறுக்கல் போன்றவற்றை குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காடு ஏரியில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்திருப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: