அரசு ரகசியங்களை கசிய விட்டதாக புது வழக்கு சிறையில் உள்ள இம்ரான் கானிடம் விசாரணை

இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை பொதுவௌியில் வௌியிட்டதாக பாகிஸ்தான் இம்ரான் கான் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறையில் உள்ள இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த 5ம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசு ரகசியங்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது இவரது தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது.

இதையறிந்த இம்ரான் கான், தன் அரசை கவிழ்க்க அமெரிக்க ஆதரவுடன் சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் சில ஆவணங்களை இம்ரான் கான் காட்டினார். இதன் பிறகு நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் மீது அமெரிக்க சதி தொடர்பான ரகசிய ஆவணங்களை பொதுவௌியில் வௌியிட்டதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானிடம் நேற்றுமுன்தினம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

The post அரசு ரகசியங்களை கசிய விட்டதாக புது வழக்கு சிறையில் உள்ள இம்ரான் கானிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: