ஊத்துக்கோட்டை எல்லையம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

 

ஊத்துக்கோட்டை, ஆக. 27: ஊத்துக்கோட்டை எல்லையம்மன் கோயிலில், வரலட்சுமி நோன்பு முன்னிட்டு, விரதமிருந்து ஏராளமான பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
வரலட்சுமி நோன்பு முன்னிட்டு, பெண்கள் காலை முதல் மாலை வரை விரதமிருந்து லட்சுமி அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில், அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து, இரவு 8 மணியளவில் வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள், தட்டுகளில் தேங்காய், வாழைப்பழம், பூ, மஞ்சள் கயிறு மற்றும் ஆப்பிள், மாதுளை, அன்னாசி, சாத்துக்குடி உள்ளிட்ட பலவகையான பழங்கள் வைத்து, ஊர்வலமாக சென்று எல்லையம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர் பெண்கள் தானியங்கள் மற்றும் வாழை இலை மீது அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

The post ஊத்துக்கோட்டை எல்லையம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு: ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: