உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன்!

அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் கார்ல்சன் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார்.

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார். உலக அளவில் 2-ம் நிலை, 3-ம் நிலை வீரர்களை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, முதல்நிலை வீரரான கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். நாக் அவுட் உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைபிரேக்கர் போட்டியின் 2 சுற்றுகளிலும் வென்று கார்ல்சன் சாம்பியன் ஆனார்.

உலக சாம்பியனாக இருந்த கார்ல்சனிடம் 18 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார்.
உலகக் கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம், 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. உலகக் கோப்பையில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். 18 வயதில் செஸ் உலகக் கோப்பை இறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன்! appeared first on Dinakaran.

Related Stories: