அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்!: உலகிலேயே மிகப்பெரிய இடுகாட்டில் வியப்பூட்டும் புகைப்படங்கள்..!!

ஈராக்கின் நஜாப் நகரில் அமைந்துள்ள இந்த இஸ்லாமிய கல்லறை உலகிலேயே மிகப்பெரிய கல்லறையாக கூறப்படுகிறது. ஈராக் மக்கள் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய பயன்படுத்திய இந்த இடுகாடு, காலப்போக்கில் மிகப் பெரியதாகி, இப்போது உலகின் மிகப்பெரிய கல்லறை என்று அறியப்படுகிறது. இந்த கல்லறையின் பெயர் வாடி அல்-சலாம், அதாவது அமைதியின் பள்ளத்தாக்கு. ஷியா முஸ்லீம்களுக்கு புனிதமானதாக கருதப்படும் இந்த நகரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஈராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் அதிகமானதில் இருந்து இந்த கல்லறை பெரிதாகி வருகிறது. இங்கு ஒருவரை அடக்கம் செய்வதற்கான செலவு சுமார் 5 மில்லியன் ஈராக் தினார்களை எட்டியுள்ளது.

The post அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்!: உலகிலேயே மிகப்பெரிய இடுகாட்டில் வியப்பூட்டும் புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: