ஜார்ஜியா நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நாளை சரண்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியா நீதிமன்றத்தில் நாளை சரண் அடைவதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் சட்டவிரோதமாக முடிவுகளை மாற்றியதாக ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை டிரம்ப் சரண் அடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘நீங்கள் இதனை நம்புவீர்களா? ஜார்ஜியாவின் அட்லாண்டாவிற்கு நான் கைதாவதற்காக செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதத்தில் இருந்து முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாவது இது நான்காவது முறையாகும். டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அவரது வழக்கறிஞர்கள் அட்லாண்டா வழக்கறிஞர்களை சந்தித்து ஜாமீனில் விடுவிப்பது குறித்த விவரங்களை ஆலோசித்தனர்.

The post ஜார்ஜியா நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நாளை சரண் appeared first on Dinakaran.

Related Stories: