உதய்ப்பூர்: காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் பிராந்திய மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில்,‘‘ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்கள் கேள்வி கேட்கும் போதுதான் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தும் சம்பவங்கள் குறைய ஆரம்பிக்கும். மக்கள் நலன் சார்ந்த ஆளுமை தொடர்பாக சட்ட பேரவைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். சபையின் கண்ணியம் மற்றும் மதிப்பை காக்கும் வகையில், உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்.
அப்போதுதான், சபையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.நாடாளுமன்றம், சட்ட பேரவைகளில் சட்டங்கள் இயற்றப்படும் போது மக்களிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளையும் சேர்ப்பது குறித்து ஆராய வேண்டும். சட்ட பேரவைகளின் தலைவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டும். நாட்டின் அனைத்து சட்டபேரவைகளை இணைக்கும் வகையில் ஒரு தேசம், ஒரு சட்டபேரவை அமைப்பு திட்டத்தை செயலாக்குவதற்கு மாநில சட்டபேரவைகள் முன்வரவேண்டும்’’ என்றார்.
The post நாடாளுமன்றத்தில் அமளி குறைய மக்களவை சபாநாயகர் யோசனை appeared first on Dinakaran.