ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17ம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா (c), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷன் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 17 பேர் கொண்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
The post ஆசிய கோப்பை தொடருக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! appeared first on Dinakaran.
