42 விமானங்கள், 8 கப்பல்களுடன் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சி

பெய்ஜிங்: தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதனை சுற்றி வளைத்து சீனா நேற்று போர் பயிற்சியை தொடங்கியது. சீனா தைவானை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கூறி வருகின்றது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் தைவானின் துணை அதிபர் வில்லியம் லாய் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது சான்பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நேற்று திடீரென போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. சீனா ராணுவத்துக்கு சொந்தமான படகுகள், போர் விமானங்கள், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘எங்களது ஆயுத படைகள் 42 சீன போர் விமானங்களை கண்டறிந்து உள்ளது. இவற்றில் 26 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் கோட்டை கடந்து சென்றுள்ளன. இவை தவிர 8 கப்பல்களுடன் சேர்ந்து விமானங்கள், கூட்டு ரோந்து பணியையும் மேற்கொண்டுள்ளன’ என்று தெரிவித்து உள்ளது.

The post 42 விமானங்கள், 8 கப்பல்களுடன் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: